உலக சந்தையில் சீமெந்து விலை அதிகரித்துள்ள பின்னணியில், உள்நாட்டிலும் சீமெந்து விலை அதிகரிக்கும் சாத்தியம் எழுந்துள்ளதாக சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலக சந்தையில் சீமெந்து விலை அதிகரித்துள்ளமையினால், சீமெந்து இறக்குமதிக்கு அதிக செலவு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சீமெந்துக்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் அண்மையில் ரத்து செய்திருந்தது.
இந்த நிலையில், 50 KG சீமெந்து மூடையொன்றின் விலையை 93 ரூபாவால் அதிகரிக்க சீமெந்து இறக்குமதியாளர்கள் தீர்மானித்திருந்தனர்.
இதன்படி, 50 KG சீமெந்து மூடையொன்றின் புதிய விலை 1098 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனினும், சீமெந்து இறக்குமதிக்காக தற்போது ஒரு மூடைக்காக 1300 ரூபா வரை செலவிட நேர்ந்துள்ளமையினால், எதிர்வரும் தினங்களில் சீமெந்து விலையை அதிகரிக்க கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்