சந்திரிக்காவின் புத்தளம் கூட்டத்தில் பரபரப்பு:மேடையில் இருந்து வெளியேறினார்

 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா  குமாரதுங்க கலந்துகொண்ட பிரசார கூட்டத்தில் பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க இன்று மாலை புத்தளம் கரைத்தீவு மண்ணில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிக்கொண்டிருக்கும் போது ‘க்ளீன் புத்தளம்’ அமைப்பின் சில உறுப்பினர்கள் இடைநடுவில் குறுக்கிட்டு ‘மேடம் இரண்டு நிமிடம் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இதன்போது உரையாற்றிக்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி சற்று நேரம் அமைதி காத்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் ‘தாம் சொல்ல வந்த விடயங்களை மிகவும் சுருக்கமாக தெளிவாக சிங்கள மொழியில் க்ளீன் புத்தளம் அமைப்பின் உறுப்பினர்கள் கூறிமுடித்து விட்டனர்.

இதன்போது இந்த விவகாரம் தொடர்பில் தேர்தல் முடிந்த கையுடன் நல்லதொரு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க இங்கு கூறினார்.

எனினும் அவருடைய பேச்ச தமக்கு திருப்த்தியை தரவில்லை என்று கோஷம் எழுப்பிய க்ளீன் புத்தளம் உறுப்பினர்கள் ‘எப்பா எப்பா கொழும்பு குனு அப்பிட்ட எபா’ என்று ஒருமித்த குரலில் கோஷம் போட்டனர்.

இதனை மிகவும் சிரித்தபடி மேடையில் இருந்தவாரே முன்னாள் ஜனாதிபதி பார்த்துக்கொண்டிருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் அங்கு வருதை தந்த நீல சேர்ட் அணிந்த ஒருவர் இப்படி கத்த வேண்டாம். நாகரீகமாக நடந்துகொள்ளுங்கள் என்று சொன்னதும் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

மேடையில் இருந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவவி ஹாஜியார் அனைவரையும் சமரசப்படுத்தினார்.

இவர்களின் பிரச்சினைகள் ஒருபுறம் சென்றுகொண்டிருக்கையில் அனைவருக்கும் கை அசைத்தபடி மேடையை விட்டு வெளியேறினார் முன்னாள் ஜனாதிபதி.

Thanks raseen

 

You May also like