1000 ரூபா வழங்கமுடியாதாம்; அரசுக்கு கம்பெனிகள் பதிலடி!

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் பெருந்தோட்டக் கைத்தொழில்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கும், பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

இதன்போது தற்போதைய பொருளாதார நெருக்கடியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவது கடினம் என கம்பனிகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பெருந்தோட்டக்கம்பனிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வரிச்சலுகை மற்றும் ஏனைய நிவாரணங்கள் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.

எனினும், ஆயிரம் ரூபா தொடர்பில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இரண்டாம் சுற்று சந்திப்பு விரைவில் நடைபெறவுள்ளது.

You May also like