மீன் விற்பனை லொறியில் முளைத்த கேரள கஞ்சா

மன்னார் இலுப்பைக்கடவை கடலோரப் பிரதேசத்திலிருந்து 131 கிலோ 725 கிராம் எடைகொண்ட கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்திவரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்ற இந்தக் கேரள கஞ்சாவுடன் இலங்கையர்கள் இருவர் இன்று அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணித்த லொறியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மீன் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட லொறியில் இந்த போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா போதைப்பொருளின் உள்நாட்டுப் பெறுமதி 39 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

You May also like