ஓட்டமாவடியில் குவியும் உடல்கள்- அடக்கம் செய்ய அம்பாறையில் புது இடம்!

கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்கள் மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டுவரும் நிலையில் அங்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் அம்பாறை மாவட்டத்தில் புதிய இடம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பகுதியில் 03 ஏக்கர் நிலப்பரப்பு இதற்காக தெரிவு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி பகுதியில் கோவிட் தொற்றினால் உயிரிழந்த 1,470 பேரின் உடல்கள் இதுவரை அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் 1,383 முஸ்லிம்களின் ஜனாஸாக்களும், 24 பெளத்தர்களின் சடலங்களும், 39 இந்துக்களின் சடலங்களும், 24 கத்தோலிக்கர்களின் சடலங்களும் ஓட்டமாவடி பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like