ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா? இல்லையா? நாளை தீர்மானம்!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா? அல்லது தளர்த்துவதா? என்பது தொடர்பில் நாளை (03) அறிவிக்கப்படும் என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நாளை (03) கூடவுள்ள கொவிட்−19 தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி கூட்டத்திலேயே, இதற்கான இறுதித் தீர்மானம் எட்டப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் பரவலை அடுத்து கடந்த 20ம் திகதி இரவு 10 மணிக்கு அமுல்படுத்த ஊரடங்கு, எதிர்வரும் 6ம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

You May also like