வெள்ளைப்பூண்டு மோசடி;சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றுக்கு!

சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வெள்ளைப்பூடு முறைகேடு தொடர்பில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த கைது நடவடிக்கை  நேற்று முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதொச நிறுவனத்தின் கொள்வனவு தொடர்பான உதவி முகாமையாளர், சிரேஷ்ட விநியோக முகாமையாளர், விநியோக முகாமையாளர் மற்றும் வெலிசர மொத்த விற்பனை முகாமையாளர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வெள்ளைப்பூடு முறைகேடு தொடர்பில் வாக்குமூலம் வழங்கும் வகையில்  குற்றப்புலனாய்வு  திணைக்களத்திற்கு வருகைத்தந்த நிலையிலே குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரும் இன்று வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May also like